வேலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட - 64,816 பேருக்கு பக்க விளைவுகள் இல்லை : ஆட்சியர் சண்முகசுந்தரம் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 64,816 பேருக்கு இதுவரை எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் ஆரோக்கியமாக உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வேலூர் மாநகரில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் முன் களப்பணியாளர்கள், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல் துறையினர் மற்றும் வேலூர் மார்க்கெட் பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் இதுவரை 64,816 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘கரோனா தடுப்பூசி பல்வேறு கட்ட பரிசோதனைகள் மற்றும் ஆய்வுகளின் முடிவில் முற்றிலும் பாதுகாப்பானது. ஆற்றல் மிக்கது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் இதுவரை 22,251 சுகாதார துறை ஊழியர்கள், 10,082 முன்கள பணியாளர்கள், 6,202 தேர்தல் அலுவலர்கள், 26,281 பொதுமக்கள் என மொத்தம் 64,816 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

தடுப்பூசி எடுத்துக் கொண்ட அனைவரும் எந்தவித பக்க விளைவுகள் இல்லாமல் ஆரோக் கியத்துடன் இருக்கின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ மனைகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. எனவே, பொதுமக்கள், தேர்தல் அலுவலர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் தன்னார்வலர்கள் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்’’ என தெரி வித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்