நாராயணி பீடத்தில் இரண்டு நாள் இலவச கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
வேலூர் அடுத்த புரம் நாராயணி பீடம் மற்றும் சுகாதாரத் துறையினர் சார்பில், இரண்டு நாள் இலவச கரோனா தடுப்பூசி முகாம் நேற்று முன்தினம் தொடங்கியது. நாராயணி பீடம் அன்னலட்சுமி மண்டபத்தில் நடைபெற்ற முகாம் குறித்து புரம், திருமலைக்கோடி பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. இந்த முகாமை நாராயணி பீடம் இயக்குநர் மற்றும் அறங்காவலர் சுரேஷ்பாபு தொடங்கி வைத்தார். முகாம் நிறைவு நாளான நேற்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பார்வையிட்டார். அப்போது, புரம் இயக்குநர் சுரேஷ்பாபு உடனிருந்தார்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற முகாமில் சுமார் 1,500 பேர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago