வாக்குச்சாவடி மையங்களுக்கு - மாற்றுத்திறனாளிகளை அழைத்துவர 500 சக்கர நாற்காலிகள் தயார் : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தகவல்

By செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் சிரம மில்லாமல் வாக்களிக்க வாக்குச் சாவடி மையங்களில் 500 சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தி யாளர்களிடம் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் 2,395 மாற்றுத்திறனாளிகள், ஆம்பூர் தொகுதியில் 2,115 மாற்றுத் திறனாளிகள், ஜோலார்பேட்டை தொகுதியில் 1,737 மாற்றுத்திறனாளிகள், திருப்பத் தூர் தொகுதியில் 1,632 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 4 தொகுதிகளில் 7,879 மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இவர்கள், அனைவரும் தேர்தலில் சிரமமின்றி வாக்களிக்க தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

7,879 மாற்றுத்திறனாளிகளில் 466 பேர் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் 4 தொகுதிகளில் தபால் வாக்கை பெற சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அக்குழுவினர் நேற்று (மார்ச் 26) முதல் வீடு, வீடாக சென்று தபால் வாக்கை பெறும் பணியில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 1,371 வாக்குச்சாவடிமையங்கள் அமைக்கப்பட்டுள் ளன. இதில், 499 மையங்களில் 500-க்கும் மேற்பட்ட சக்கர நாற்காலிகள் ஒவ்வொரு இடத்திலும் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன. நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் வாக்குச்சாவடி மையம் வர சிரமப்பட்டால் அவர்களை சக்கர நாற்காலியில் வாக்குச் சாவடி மையங்களுக்கு அழைத்து வர தலா ஒருவர் நியமிக்கப்பட உள்ளனர்.

அதேபோல, அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சாய்தள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவசர தேவைகளுக்காக வாக்குச்சாவடி மையங்களில் கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப் பட்டுள்ளன.

எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்களிக்க தகுதியான மாற்றுத்திறனாளிகள் தங்களது வாக்கை ஏப்ரல் 6-ம் தேதி தவறாமல் செலுத்த வேண்டும். அதற்கான அனைத்து உதவிகளையும் மாவட்ட தேர்தல் பிரிவு செய்ய தயாராக உள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்