திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் குட்டக்கரை, புளியாங்குப்பம் ஆகிய மலை கிராமங்களில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் மேற் கொள்ளப்பட்டு வரும் பணியை ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.
குட்டக்கரை கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாய்வு தளம், குடிநீர், கழிப்பறை மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார். பின்னர், அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் நம்மியம்பட்டு ஊராட்சி புளியாங்குப்பம் கிராமத்துக்கு சென்று, அங்குள்ள வாக்குச்சாவடி மையத்தில் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர், அத்திப்பட்டு கிராமத்தில் உள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் ஜமுனாமரத்தூர் பழங் குடியினர் உழவர் உற்பத்தி யாளர் நிறுவனங்களில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார். பச்சை மிளகாய்களை கொண்டு வரைந்த தேர்தல் விழிப்புணர்வு கோலம் மற்றும் ஓவியத்தை பார்வையிட்டார்.
இதையடுத்து, ஜமுனாமரத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்களிப்பது குறித்த செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில், உதவி ஆட்சியர் (பயிற்சி) அமித்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago