விழுப்புரம் நீதிமன்றத்தில் அன்புமணி மீதான வழக்கு முடிவுக்கு வருகிறது :

By செய்திப்பிரிவு

கடந்த 2013-ம் ஆண்டில் வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கு விழுப்புரம் முதலாவது குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது இவ்வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து அவருக்கு விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், கடந்த 22-ம் தேதி அன்புமணிக்கு பிணையில் வெளியே வரமுடியாதபடியான பிடியாணை (பிடிவாரண்ட்) வழங்கி நடுவர் அருண்குமார் உத்தரவிட்டார். உயர்நீதிமன்ற உத்தரவு தங்களுக்கு வராத நிலையில் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று அன்புமணிக்கு ஆஜராகும் வழக்கறிஞர் ராஜாராமன், அன்புமணி மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டதற்கான உயர்நீதிமன்ற உத்தரவை விழுப்புரம் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மேலும் உயர்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்ததால் இவ்வழக்கை முடித்து வைக்கும்படி நடுவரிடம் கேட்டுக் கொண்டார்.

இதுகுறித்து அரசு வழக்கறிஞர் செம்புலிங்கத்திடம் கேட்டபோது, "சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ரத்து செய்யப்பட்டதால், தானாக இவ்வழக்கு ரத்தாகிவிடும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்