ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அமமுகவில் இணைந்து செயல்பட்ட அறந்தாங்கி அதிமுக எம்எல்ஏ இ.ஏ.ரத்தினசபாபதி, பின்னர் மீண்டும் அதிமுகவில் இணைந்து செயல்பட்டார்.
ஆனால், வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் ரத்தினசபாபதிக்கு அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப் படவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் இருந்த அவர், அறந்தாங்கி தொகுதி அதிமுக வேட்பாளர் மு.ராஜநாயகத்துக்கு ஆதரவாக தேர்தல் பணியில் ஈடுபடவில்லை. இதையடுத்து, அவரை சமாதானப்படுத்தும் விதமாக தெற்கு மாவட்ட அவைத் தலைவர் பதவி நேற்று முன்தினம் அளிக்கப்பட்டது.
இந்தச் சூழலில், புதுக் கோட்டையில் நேற்று செய்தியாளர் களிடம் எம்எல்ஏ ரத்தினசபாபதி கூறியது: அதிமுகவில் பதவியில் இருப்பதைவிட தொண்டராகவே இருக்கவே விரும்புகிறேன். எனவே, தற்போது வழங்கப்பட்ட தெற்கு மாவட்ட அவைத் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன். ஒவ்வொரு தொகுதியிலும் 15,000 முதல் 20 ஆயிரம் வரையிலான வாக்குகளை அமமுக பிரிக்கப் போவதால், அதிமுக பின்னடைவை சந்தித்து வருகிறது. அதிமுக, அமமுக இணைந்திருந்தால் இந்த பின்னடைவு ஏற்பட்டிருக்காது. இதைக் கூறிய ஒரே காரணத் துக்காக அறந்தாங்கி தொகுதி யில் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள் ளது. அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால், அமமுக இணைவது கட்டாயம். அதிமுக, அமமுகவை இணைக்க மீண்டும் முயற்சி செய்வேன். அதே வேளையில், இந்தக் கட்சியில் உள்ள விஷச்செடிகளை அகற்றவும் கடுமையாக உழைப்பேன் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago