சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வேட்பாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த கூட்டம் தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அலுவலர் சமீரன் பேசியதாவது:
வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும். வேட்பாளர்கள் தங்களுக்கான முகவர்களை உரிய நேரத்தில் நியமிக்க வேண்டும். அனைத்து பணியாளர்களும் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும்.
வாக்காளர்கள் தவிர தேர்தல் ஆணைய அங்கீகார கடிதம் உள்ளவர்கள் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் செல்ல முடியும். முதல்வர், அமைச்சர், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இ தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலரால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களில் வேட் பாளர்கள் தங்கள் முகவர்களுடன் கலந்துகொள்ள வேண்டும்.
பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள் போன்றவற்றை வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்னர் நிறுத்திவிட வேண்டும். வாக்குப்பதிவுக்கு 72 மணி நேரத்துக்கு முன்னர் இரு சக்கர வாகன பேரணி கூடாது. வேட்பாளர்கள் தேர்தல் செலவுகள் குறித்த சரியான கணக்குகளை உரிய பதிவேட்டில் பராமரித்து வைத்திருக்க வேண்டும். வாக்காளர்களுக்கு வழங்கப்படும் அடையாளச் சீட்டுகள் வெள்ளைத் தாளில் இருக்க வேண்டும். அதில் சின்னம், வேட்பாளரின் பெயர் அல்லது கட்சியின் பெயர் ஆகியவை இருக்கக்கூடாது. தனிமனித இடை வெளியை கடைபிடித்து வாக்கு சேகரிக்க வேண்டும். முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்” என்றார்.
காவல்துறை பார்வையாளர் திலீப் பேசும்பாது, “தேர்தல் சம்பந்தமாக எந்த ஒரு புகாராக இருந்தாலும் 7548835008 எந்த தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்” என்றார்.
தேர்தல் பார்வையாளர்கள், காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங், மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா, வேட்பாளர்கள் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago