விழிப்புணர்வு பைக் பேரணி :

By செய்திப்பிரிவு

தமிழக காவல்துறை மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்டப்பணிகள் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன பேரணி தென்காசியில் நடைபெற்றது. ஆட்சியர் அலுவல கத்தில் பேரணியை ஆட்சியர் சமீரன் தொடங்கிவைத்தார். பழைய பேருந்து நிலையம், யானைப்பாலம், மேலகரம் வழியாக குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் பேரணி நிறைவ டைந்தது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ் வாதார இயக்க திட்ட இயக்குநர் விஜயலெட்சுமி, தென்காசி துணை காவல் கண்காணிப்பாளர் கோகுலகிருஷ் ணன், உதவி திட்ட அலுவலர் சிவக்குமார், காவல்துறையினர், கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், ஸ்மார்ட் சிட்டி அரிமா சங்கம் இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மேலப்பாளையத்தில் நடத்தின. அரிமா சங்க பட்டய தலைவர் ஆர். மணிகண்டன் தலைமை வகித்தார். துணை வட்டாட்சியர் பழனி, முதுநிலை வருவாய் ஆய்வாளர் மாரிதுரை ஆகியோர் வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட் இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கினர். நூலகர் முத்துகிருஷ் ணன், கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். அரிமா சங்க பட்டய செயலா ளர் எஸ். சங்கர வேலு நன்றி கூறினார். ஏற்பாடுகளை பாளையங் கோட்டை தேர்தல் நடத்தும் அலு வலர் ஜி.கண்ணன், வட்டாட்சியர் க.செல்வம் செய்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்