வேலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் கூடுதலாக 414 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 364 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட் டுள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான 437 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 437 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 464 விவிபேட் கருவி ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலகமான வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பி அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வேலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக, வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 17 பேர் களத்தில் உள்ளனர். இதனால், வேலூர் தொகுதியில் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட் டுள்ளது. இதற்காக, கூடுதலாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் நேற்று தொடங்கின. மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலை மையில் அனைத்து கட்சியினர் முன்னிலையில் குலுக்கல் முறை யில் வேலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கூடுதலாக 414 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கும் பணிகள் ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நேற்று நடை பெற்றது.
அதன் பிறகு வேட் பாளரின் பெயர் மற்றும் அவர் களுக்கான சின்னங்கள் ஒட்டும் பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago