பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கொடிவேரி அணையில் குளிக்க இன்று முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த கொடிவேரி அணை சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. பவானிசாகரில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்படும் நீர், கொடிவேரி அணையில் தடுக்கப்பட்டு, கொடிவேரி பாசனக் கால்வாய்களுக்கு திருப்பி விடப்படுகிறது. கொடிவேரி அணையில் இருந்து வழிந்தோடும் உபரி நீர் பவானி ஆற்றில் செல்கிறது.
கொடிவேரி அணையில் நீர் வழிந்தோடும் பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அணையில் தேங்கிய நீரில் பரிசல் பயணம் மேற்கொள்ளவும் அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது கொடிவேரி அணை மற்றும் கால்வாய் பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன.
இதன் காரணமாக, இன்று (24-ம் தேதி) முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை 10 நாட்களுக்கு, சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், பாிசல் பயணம் மேற்கொள்ளவும் பொதுப்பணித்துறையினர் தடைவிதித்துள்ளனா்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago