அரியலூர் மாவட்டம் வாரணவாசி கிராமம் அரியலூர்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ளது. இந்த கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையை உயர்த்தி, விரிவாக்கம் செய்யும் பணி சாலையின் இருபுறங்களிலும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சாலையை உயர்த்தி அமைப்பதால், மழைக்காலங்களில் சாலையோரங்களில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து விடுகிறது.
எனவே, வீட்டுக்குள் மழைநீர் வராமல் இருக்க முறையாக வடிகால் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். சாலையின் உயரத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த கீழப்பழுவூர் போலீஸார், தேசிய நெடுஞ்சாலைத் துறையினருடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago