தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தென்காசி மாவட்டத் தலைவர் ஆரோக்கிய ராசு, நிர்வாகிகள் செய்யது இப்ராகிம் மூசா, சேவியர் ஸ்டீபன் ஞானம் உள்ளிட்டோர் ஆட்சியர் சமீரனிடம் அளித்த மனு விவரம்:
மாற்றுத் திறனாளிகள், கர்ப்பி ணிகள், தீவிர நோயுடை யோருக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
தென்காசி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 9,043 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இரண்டாம்கட்ட பயிற்சி வகுப்புக்கு முன்பாக தபால் வாக்கு கிடைக்கச் செய்ய வேண்டும். கிடைக்காதவர்களுக்கு பயிற்சி வகுப்பிலேயே வழங்கி, பயிற்சி மையங்களில் தபால் வாக்கை செலுத்த வாக்குப் பெட்டிகள் வைக்க வேண்டும்.
முதல்கட்ட பயிற்சி வகுப்பு ஆணைகள் பலருக்கு நேரடியாக கிடைக்காத நிலையில், பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளவில்லை என்று கூறி விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸை ரத்து செய்து, மீண்டும் ஒரு முறை பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு அந்தந்த தொகுதியிலேயே தேர்தல் பணி வழங்க வேண்டும்.
தேர்தல் பணிக்கான பயிற்சிகள் மற்றும் தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிகளுக்கு சிறப்பு பேருந்து வசதிகள் செய்து தர வேண்டும். வாக்குச்சாவடிகளில் 2 இரவுகள் தங்கும் சூழல் உள்ளதால் குடிநீர், சுகாதார வசதி, பாதுகாப்பு வசதிகள் செய்து தர வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago