வேலூர் மாவட்டத்தில் - ரூ.37.38 லட்சம் ரொக்கம், பரிசு பொருட்கள் பறிமுதல் :

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் பறக்கும் படை, தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் ரூ.37 லட்சத்து 38 ஆயிரத்து 470 மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் சட்டப் பேரவை பொதுத் தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் சார்பில் பொதுமக்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பட்டுவாடா செய்வதை தடுக்க பறக்கும் படை, தேர்தல் நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக, மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு தலா 9 பறக்கும் படைகள், 9 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருவதுடன், தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை ரூ.26 லட்சத்து 82 ஆயிரத்து 430 ரொக்கம் மற்றும் ரூ.10 லட்சத்து 56 ஆயிரத்து 40 மதிப்பிலான பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இதில், வேலூர் மற்றும் காட்பாடி தொகுதிகளில் மட்டும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து ரூ.6 லட்சத்து 31 ஆயிரத்து 976 தொகையை திரும்பப் பெற்றுள்ளனர்.

மீதமுள்ள தொகை அரசின் சார் கருவூலத்தில் பாதுகாப்பாக கணக்கு வைக்கப்பட்டுள்ளது என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்