கற்றல் திறன், சிறந்த செயல்பாடுகள் அடிப்படையில் - சேத்தியாத்தோப்பு வாழைக்கொல்லை ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு விருது :

By செய்திப்பிரிவு

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வாழைக்கொல்லை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் ஒருங் கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின்கீழ் 2020-2021-ம்கல்வியாண்டில் மாணவர்களின் கற்றல் திறன்களில் முதன்மையாகவும்,பள்ளி வளர்ச்சிக்காக சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய தலா 8 தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி கடலூரில் நடைபெற்றது.

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரோஸ்நிர்மலா தலைமை தாங்கினார். இதில் வாழைக் கொல்லை ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது.

பள்ளி தலைமைஆசிரியர் புஷ்பராஜ், பட்டதாரி ஆசிரியர் கருணாகரன் ஆகியோர் விருதை பெற்றனர். வடலூர் மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ், கீரப்பாளையம் வட்டார வளமேற்பார்வையாளர் ரமேஷ் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து வாழைக் கொல்லை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சிறந்த விருது கிடைத்ததை அறிந்த ஊராட்சிமன்றத்தலைவர் ஜெயந்தி குறளரசன்,துணைத்தலைவர் டாக்டர் மணிமாறன் மற்றும் கிராம பொதுமக்கள் ஆகியோர் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் பாராட்டுக்களையும் வாழ்த்துக் களையும் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்