பள்ளிபாளையம், சேலத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.5.51 லட்சம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.
பள்ளிபாளையம் அம்மன் கோயில் பகுதியில் கூடுதல் பறக்கும்படை அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். லாரியில் எவ்வித ஆவணமும் இல்லாமல் ரூ.4 லட்சம் இருந்தது தெரியவந்தது.
லாரியை ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் கொப்பரபோடு பகுதியைச் சேர்ந்த ரேனுபாபு (35) என்பவர் ஓட்டி வந்தார். அவரிடம் பணத்துக்கான ஆவணம் இல்லாததால் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து குமாரபாளையம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர். மேலும், உரிய ஆவணத்தை ஒப்படைத்து பணத்தை திரும்ப பெற்றுச்செல்லும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட மாசிநாயக்கன்பட்டியில் தேர்தல் பறக்கும்படை அலுவலர் கமலக்கண்ணன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று அதிகாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த மினி லாரியில் சோதனை நடத்தினர். சோதனையில், மினி லாரியில் வந்த வாழப்பாடி, ஆரூர்பட்டி வளையக்காரனூர் பகுதியைச் சேர்ந்த மாட்டு வியாபாரி, மாடு வாங்க ஆவணமின்றி வைத்திருந்த ரூ.1.51 லட்சத்தை பறிமுதல் செய்து, மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago