தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தேவிபட்டணம் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, வனத்துறையினரைப் பார்த்ததும் 6 பேர் தப்பி ஓடினர். அவர்களை வனத்துறையினர் விரட்டிச் சென்றதில், 2 பேர் மட்டும் பிடிபட்டனர். விசாரணையில் அவர்கள், சிவகிரி அருகே உள்ள ராமசாமியாபுரத்தைச் சேர்ந்த கலைஞர் (43), ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்த செந்தூர்பாண்டியன்(28) என்பது தெரியவந்தது. இவர்கள், வனப்பகுதியில் இருந்து யானைத் தந்தத்தை எடுத்துச் சென்று பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. 2 தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பிச் சென்ற 4 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago