அனைத்து வகையான காடுகளின் முக்கியத்துவத்தை மையப்படுத்தி ஐக்கிய நாடுகள் சபையானது மார்ச் 21-ம் தேதியை சர்வதேச காடுகள் தினமாக அறிவித்தது. இதனை முன்னிட்டு மணிமுத்தாறில் இயங்கிவரும் அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில் காட்டுக்கு களப்பயணம் ஏற்பாடு செய்தது.
செம்மணல் தேரிக்காட்டில் அமைந்துள்ள அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில் காடானது மிகவும் பழமையான ஒன்று. இக்காட்டில் வற்றாத சுனை (இயற்கை நீருற்று) உள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தாவரவியல் துறை தலைவர் பெ. ரவிச்சந்திரன் தேரிக்காடு மற்றும் சுனையில் காணப்படும் தாவரங்கள் குறித்து விளக்கமளித்தார். தேரிக்காட்டில் வாழும் காட்டுயிர்கள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் பேட்ரிக் டேவிட், மரிய ஆண்டனி, சு.தளவாய்பாண்டி மற்றும் அ. சரவணன் ஆகியோர் விளக்கமளித்தனர். அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மைய ஒருங்கிணைப்பாளர் மு. மதிவாணன் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago