தேர்தல் பார்வையாளர்களிடம் நேரில் புகார் அளிக்கலாம் : நெல்லை மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவை தேர்தலை கண்காணிக்க வந்துள்ள பொதுப்பார்வையாளர்களிடம் நேரில் புகார் தெரிவிக்கலாம் என்று, திருநெல்வேலி மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான வே.விஷ்ணு தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை தொகுதிகளுக்கு பொது பார்வையாளராக டாக்டர்சுப்ரதா குப்தா ( செல்போன் எண்: 83003 20615), அம்பாசமுத்திரம் தொகுதிக்கு பொதுப்பார்வையாளராக சுரேந்திரன் நாராயன் பாண்டே ( செல்போன் எண் 83003 21068), நாங்குநேரி தொகுதிக்கு பொதுப்பார்வையாளராக நூன்சாவாத்திருமலை நாயக் ( செல்போன் எண்: 83003 21561), ராதாபுரம்தொகுதிக்கு அலோகேஷ் பிரசாத் (செல்போன் எண்: 83003 21658), மேலும் 5 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் காவல் பார்வையாளராக சுதன் சுகுமார் (செல்போன் எண் : 83003 21731) நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்துவது தொடர்பாக பொதுப்பார்வையாளர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் மற்றும் நாங்குநேரி தொகுதி தொடர்பான தேர்தல் புகார்களை பொதுப் பார்வையாளர்களிடம் காலை 9 மணி முதல் 10 மணி வரை வண்ணார்பேட்டை அரசு சுற்றுலா மாளிகையில் நேரில் சந்தித்து தெரிவிக்கலாம்.

ராதாபுரம் தொகுதி பொதுப்பார்வையாளர் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்துக்கான காவல் பார்வையாளரை மாலை 5 மணிமுதல் 6 மணி வரை வண்ணார்பேட்டை அரசு சுற்றுலா மாளிகையில் நேரில் சந்தித்து தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என்று, மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்