திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சட்டப் பேரவை தொகுதிகளிலும் 6 பேர் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றனர்.
திருநெல்வேலி தொகுதியில் மொத்தம் 40 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதில் 24 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளான நேற்று 2 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் இத்தொகுதியில் தேர்தல் களத்தில் மொத்தம் 14 பேர் உள்ளனர்.
பாளையங்கோட்டை தொகுதியில் மொத்தம் 32 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதில் 22 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்புமனுக்களை யாரும் வாபஸ் பெறவில்லை. இதனால் இத் தொகுதியில் தேர்தல் களத்தில் மொத்தம் 10 பேர் உள்ளனர்.
அம்பாசமுத்திரம் தொகுதியில் 32 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதில்19 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஒருவர் தனது வேட்புமனுவை வாபஸ்பெற்றதால், 12 பேர் போட்டியிடுகின்றனர்.
நாங்குநேரி தொகுதியில் 41 வேட்புமனுக்கள் தாக்கல்செய்யப்பட்டிருந்தன. அதில்24 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 2 பேர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர். 15 பேர் களத்தில் உள்ளனர்.
ராதாபுரம் தொகுதியில் 45 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதில் 19 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஒருவர் வேட்புமனுவை திரும்ப பெற்றதை அடுத்து, 25 பேர் போட்டியிடுகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 5 தொகுதிகளிலும் 76 பேர் களம்காணுகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago