வாக்கு சேகரிக்கச் சென்றபோது அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சங்கரன்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளராக அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி போட்டியிடுகிறார். அவர், சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் நேற்று பிரச்சாரம் செய்தார். வல்லராமபுரம் கிராமத்துக்கு அமைச்சர் வருவதை அறிந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மக்கள் கருப்பு கொடிகளுடன் திரண்டனர். அனைத்து மறவர் நல கூட்டமைப்பு சார்பில் அமைச்சர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் மற்றும் அவருடன் வந்த வாகனங்களை மறிக்க முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால், போலீஸாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அமைச்சர் உள்ளிட்ட அதிமுகவினர் வல்லராமபுரத்தில் பிரச்சாரம் செய்யாமல் அடுத்த ஊருக்கு சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago