நாமக்கல் தொகுதியில் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் திமுக போட்டியிடுவதுடன் அதிமுகவுடன் நேரடிப் போட்டியும் நிலவுகிறது. இது தொகுதி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி யுள்ளது.
நாமக்கல் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் கடந்த 1951-ம் ஆண்டு முதல் மாறி மாறி போட்டியிட்டுள்ளன. இதில், அதிமுக 6 முறையும், திமுக, காங்கிரஸ் தலா 4 முறை மற்றும் இந்திய பொதுவுடைமைக் கட்சி 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இதில் கடந்த 1977, 1980, 1984, 1989, 1991 மற்றும் 1996 என 6 முறைதொடர்ச்சியாக அதிமுக, திமுக இடையே நேரடி போட்டி நிலவியது.
இதில் அதிமுக, திமுக மாறி மாறி வெற்றி வாகை சூடியது. எனினும், 1996-ம் ஆண்டுக்குப் பின்னர் திமுக, அதிமுகவும் நேரடியாக நாமக்கல் தொகுதியில் போட்டியிடவில்லை. குறிப்பாக திமுக தரப்பில் இத்தொகுதி கூட்டணிக் கட்சியினருக்கு ஒதுக்கப்பட்டு வந்தது.
கூட்டணிக் கட்சி என்றாலும் திமுக வேட்பாளர் களம் இறங்காதது அக்கட்சியினர் மத்தியில் ஏக்கத்தை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் தற்போது நாமக்கல் தொகுதியில் திமுக போட்டியிடுகிறது.
திமுக மாவட்ட துணை செயலாளர் பி.ராமலிங்கம் திமுக சார்பில் களம் இறக்கப் பட்டுள்ளார்.
இதன்படி கடந்த 25 ஆண்டு களுக்குப் பிறகு திமுக வேட்பாளர் நாமக்கல் தொகுதியில் போட்டியிடுவதுடன், அதிமுக, திமுக இடை யேயும் நேரடிப் போட்டியும் நிலவுகிறது.
ஏறத்தாழ கால் நூற்றாண்டுக்குப் பின்னர் நாமக்கல் தொகுதியில் அதிமுக, திமுக நேரடியாகக் களம் காண்பது தொகுதி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி யுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago