பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிகுளம் மலை மீது அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
நிகழாண்டு கரோனா பரவல் அச்சம் காரணமாக தேரோட்ட நிகழ்ச்சிக்கும், சுவாமி வீதியுலா நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப் பட்டது. அதேசமயம் ஆகம விதிகளை பின்பற்றி கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பங்குனி உத்திர திருவிழாவின் நிகழ்வுகள் மலைக்கோயிலில் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பங்குனி உத்திர பெருந்திருவிழாவுக்கான கொடியேற்றம் நேற்று கோயில் வளாகத்தில் நடைபெற்றது. பாலதண்டாயுதபாணி, வள்ளி தெய்வானை சுவாமிகளுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அரோகரா முழக்கத்துடன் கொடி ஏற்றப்பட்டது. பின்னர், தீபாராதனை நடைபெற்றது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ஜெயசுதா தலைமையில் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago