திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த அமமுக, சமக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
திருநெல்வேலி தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார்நாகேந் திரன், திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ். லட்சுமணன் உள்ளிட்ட 40 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான சார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டன.
இதில் பாஜக, திமுக வேட்பாளர் கள் உள்ளிட்ட 16 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், அமமுக வேட்பாளர் பாலகிருஷ்ணன் என்ற பால்கண்ணன், சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் அழகேசன், மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவனர் மாரியப்ப பாண்டியன் உள்ளிட்ட 24 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப் பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை கண்டித்து பாலகிருஷ்ணன், அழகேசன், மாரியப்ப பாண்டியன் ஆகியோர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாக்குவாதம் செய்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாநகர காவல் துணை ஆணையாளர் சீனிவாசன் தலைமையிலான போலீஸார் அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர். இதைத்தொடர்ந்து தேர்தல் பொது பார்வையாளர் சுபத்திரன் குப்தா கோட்டாட்சியர் அலுவலகம் வந்து விசாரணை நடத்தினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago