வேலூர் மாவட்டத்தில் கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணி தொடங்கியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக் கான தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒவ் வொரு வாக்குச்சாவடியும் 1,050-க்கும் அதிகமான வாக்காளர்கள் இல்லாத அளவுக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமைக்கப்பட்ட துணை வாக்குச் சாவடிகளுடன் சேர்த்து மொத்தம் 1,783 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு, அனைத்து அடிப்படை வசதிகளும் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தவுள்ள 2,140 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2,140 மின்னணு கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் 2,296 விவிபேட் இயந்திரங்களும் பாதுகாப்பாக அந்தந்த தொகுதிகளில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டு துப்பாக்கிஏந்திய காவல் துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் ஆணையத்தின் வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு கிடங்கில் கூடுதலாக 100 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 150 விவிபேட் இயந்திரங்களும் தயார் நிலையில் வைக்க உள்ளனர். இந்த இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணி நேற்று நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் இயந்திரங்களின் சரிபார்ப்பு பணியை ஆட்சியர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago