அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வின் ஆதரவாளர் கிரம்மர் சுரேஷ் மதுரை மத்திய தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
மதுரை மத்திய சிறை அருகே கிரம்மர்புரத்தைச் சேர்ந்தவர் கிரம்மர் சுரேஷ். இவர் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் பிடிஆர்.பழனிவேல் ராஜனின் ஆதரவாளராக இருந்தார். அவரது மறைவுக்குப் பிறகு அதிமுகவில் சேர்ந்தார். பின் னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் தீவிர ஆதர வாளராக இருந்தார்.
இவர் கடந்த தேர்தலிலேயே மதுரை மத்திய தொகுதியில் ‘சீட்’ கேட்டும் கிடைக்கவில்லை. 2018-ல் மாநகர ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பதவியை அமைச்சர் செல்லூர் ராஜூ பெற்று தந்தார். ஆனால், ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலாளரான அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தனது கவனத்துக்கு வராமலே அவர் நியமிக்கப்பட்டதாகக் கூறி, பதவி கிடைத்த மறுநாளே கிரம்மர் சுரேஷை நீக்கினார். அதனால் செல்லூர் ராஜூ மீது கிரம்மர் சுரேஷ் அதிருப்தி அடைந்தார்.
அதன் பிறகு கிரம்மர் சுரே ஷுக்கு எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் பதவி வழங்கி செல்லூர் கே.ராஜூ சமா தானம் செய்தார். மேலும் மதுரை மேயர் தேர்தலில் ‘சீட்’ பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தார். ஆனால் மதுரை மேயர் பதவி பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டது.
அதனால் இந்தத் தேர்தலில் மத்தியத் தொகுதியில் ‘சீட்’ கேட்டார். ஆனால் கிடைக்காத தால் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அவர் மத்தியத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுவதற்காக நேற்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
இதுகுறித்து அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: உழைப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதுதான் நல்ல தலைமை. ஜெயலலிதா தொண்டர்களுக்கு வாய்ப்பு வழங்கி அழகு பார்ப்பார். ஆனால், தற்போது அந்நிலை இல்லை. மத்தியத் தொகுதி மக்களை நம்பி களம் இறங்கியுள்ளேன் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago