புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் போராட்டம் :

By செய்திப்பிரிவு

டீசல் விலையைக் குறைக்க வேண் டும். விசைப்படகுகளுக்கு 50 சத வீதம் டீசல் மானியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதுக் கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தில் உள்ள விசைப்படகு இறங்குதளத்தில் உள்ள அனைத்து விசைப்படகு களிலும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மீனவர்கள் கருப்புக் கொடிகளை கட்டியிருந்தனர்.

இது குறித்து மீனவர் சங்கத் தலைவர் சின்ன அடைக்கலம் கூறியபோது, “கோரிக்கை களை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை உள்ள அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்கம் சார்பில் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மீனவர் சங்கங்களைச் சேர்ந்தோர் கூடி பேசி முடிவெடுப்போம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்