வேலூர் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து தேர்தல் பொது பார்வையாளர்கள் அடங்கிய குழு வினர் ஆலோசனை நடத்தினர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பொது பார்வையாளர்கள் மற்றும் காவல் பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, வேலூர் மற்றும் அணைக்கட்டு தொகுதிக்கு தேர்தல் பார்வையாளராக பரம்பல் கவுர், கே.வி.குப்பம் (தனி) தொகுதிக்கு சித்தரஞ்சன் குமார், குடியாத்தம் (தனி) தொகுதிக்கு விபுள் உஜ்வால், காட்பாடி தொகுதிக்கு சித்ரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், தேர்தல் காவல் பார்வையாளராக 5 தொகுதிகளுக்கும் சேர்த்து மயங்க் வஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து தேர்தல் பார்வையாளர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர். இதில், தேர்தல் பார்வையாளர்கள் சித்தரஞ்சன் குமார், விபுள் உஜ்வால், சித்ரா, காவல் பார்வையாளர் மயங்க் வஸ்தவா, தேர்தல் செலவின பார்வையாளர்கள் தீபக் ஆர்.லட்சுமிபதி, அமித்கடாம் ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மாவட்ட காவல் கண்கண்காணிப்பாளர் செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் விஜயராகவன் (பொது), கணேசன் (தேர்தல்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக சான்று கண்காணிக்கும் குழு, பறக்கும் படை மற்றும் தேர்தல்நிலை கண்காணிப்பு குழுக்களின் செயல்பாடுகள் குறித்தும் 100 சதவீதம் வாக்குப்பதிவு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து விளக்கப் பட்டன. இந்தப் பணிகளை ஆய்வு செய்யவும் தேர்தல் பார்வையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago