ராதாபுரம் தொகுதியில் தேர்தல் பணிக்கான ஊழியர்களுக்கு இது வரை பணியாணை வழங்கப் படாமல் பயிற்சி வகுப்பு நடத்தப் படுகிறது. தபால் வாக்குகள் பதிவு செய்வதற்கான படிவம்-12 மற்றும் தேர்தல் பணிக்கான ஆணையை இணைத்து தேர்தல் அலுவலரிடம் சமர்ப்பித்தால்தான் தபால் வாக்கு அளிக்க முடியும்.
இதுதொடர்பாக, திருநெல்வேலி ஆட்சியர் விஷ்ணுவிடம், திமுக வேட்பாளர் அப்பாவு புகார் மனு அளித்தார். பின்னர், அவர் கூறியதாவது:
ராதாபுரம் தொகுதியில் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர் களுக்கு தேர்தல் வகுப்பு நடை பெற்று வருகிறது. இப்பணிக்குச் சென்ற பாதி நபர்களுக்கு தேர்தல் பணி ஆணை வழங்கப்ப ட்டுள்ளது. மீதி பேருக்கு ஆணை வழங்கப்படவில்லை. பணி ஆணை கிடைத்தவர்கள் மட்டும் விண்ணப் பம்-12-ஐ பூர்த்தி செய்து அதனுடன் பணியாணையை இணைத்து கொடுத்துள்ளனர். இவர்களுக்கு மட்டுமே தபால் வாக்குக்கான தகுதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற வர்களுக்கு வழங்கப்படவில்லை.
தேர்தல் வகுப்புக்கு சென்ற அனைவருக்கும் பணி ஆணையும், படிவம்12-ம் வழங்கி, தபால் வாக்கு தகுதி வழங்கப்பட வேண்டும், என்று தெரிவித்தார். ஏற்கெனவே, கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ராதா புரம் தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago