கொலை வழக்கில் இளைஞருக்கு இரட்டை ஆயுள் சிறை :

By செய்திப்பிரிவு

பாளையங்கோட்டை அருகே திம்மராஜபுரத்தை சேர்ந்தவர் இசக்கி மகன் மகேஷ் (24). இவருக்கு மணப்படைவீடு பகுதியைச் சேர்ந்த பட்டமுத்து மகன் பழனி முருகன் (30) என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் மகேஷ் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, பாளையங்கோட்டை போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து பழனி முருகனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி 1-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்து பழனிமுருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி கோகிலா தீர்ப்பு கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்