திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு - சோதனை சாவடிகளில் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் : பொது பார்வையாளர் அவினேஷ்குமார் அறிவுரை

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலை முன் னிட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் சோதனைச் சாவடிகளில் கண் காணிப்பை பலப்படுத்த வேண்டும் என காவல் பொது பார்வையாளர் அவினேஷ்குமார் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பாது காப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப் பட்டுள்ள காவல் பொது பார்வை யாளர் அவினேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் மற்றும் எஸ்பி டாக்டர் விஜயகுமார் ஆகி யோருடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது, அவினேஷ்குமார் பேசும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் 1,371 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 157 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 காவல் உட்கோட்டங்கள் உள்ளன. சட்டம் - ஒழுங்கு, மகளிர், போக்குவரத்து என மொத்தம் 22 காவல் நிலையங்கள் உள்ளன. மாவட்டம் முழுவதும் தேர்தல் பாதுகாப்புக்காக பல்வேறு முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்ல வழித்தடங்கள் கண்டறி யப்பட்டுள்ளன.

இன்னும் 2 வாரங்களில் வாக்குப் பதிவு நடைபெற இருப்பதால் மாநில எல்லைப்பகுதிகள், மாவட்ட எல்லைப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பலப்படுத்த வேண்டும். வெளியூர், வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து வாக னங்களை தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்க வேண்டும்.

காவலர்கள் பற்றாக்குறையை சரி செய்ய என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற காவலர் களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

முகக்கவசம் வழங்க வேண்டும்

கரோனா காலம் என்பதால் நோய் தடுப்பு தீவிரமாக கண் காணிக்க வேண்டும். வாக்களிக்க வருவோர்களுக்கு கையுறை, முகக்கவசம் வழங்க வேண்டும்.

வாக்குப்பதிவு நாளன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏதேனும் பிரச்சினை கள், தொழில்நுட்ப கோளாறு என ஏதாவது ஏற்பட்டால் அதை உடனடியாக சரி செய்ய ஏற்பாடு கள் செய்யப்பட்டிருக்க வேண்டும்’’ என்றார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வில்சன் ராஜசேகர், துணை காவல் கண்காணிப்பாளர்கள் தங்கவேல் (திருப்பத்தூர்), சச்சிதானந்தம் (ஆம்பூர்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்