நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் : தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து இந்த அமைப்பின் மாவட்டச் செயலர் கே.நேரு மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவின் விவரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெல் அறுவடை தொடங்கியுள்ளது. ஆனால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் போதிய அளவில் திறக்கப்படவில்லை. இதுதொடர்பாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்கும் அதிகாரிகளிடம் கேட்டால், விவசாயத் துறை இணை இயக்குநரை பார்க்கும்படி கூறுகின்றனர். அவர்களிடம் சென்றால் இது எங்களுக்கு தொடர்புடையதல்ல என்று தெரிவிக்கின்றனர். இதனால் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை குறைந்த விலைக்கு விற்க வேண்டியுள்ளது. எனவே கடந்த ஆண்டை விட கூடுதலாக 50 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்