சி-விஜில் செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவர்களுக்கு அறிவுறுத்தல் :

By செய்திப்பிரிவு

தேர்தல் நேர்மையாக நடைபெற சி விஜில் செயலி குறித்து மாணவ, மாணவியர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என,

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான வே.விஷ்ணு தெரிவித்தார்.

தேர்தல் விதிமீறல்கள் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள சி-விஜில் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் நடைபெற்றது.

மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமை வகித்து பேசியதாவது:

மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் தேர்தலை நேர்மையாக நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மாணவ, மாணவியர் உதவியாக இருக்க வேண்டும். தேர்தல் விதிமீறல் குறித்து சி விஜில் செயலி மூலம் புகார் அளிப்பது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். புகார் அளிப்பவர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்பதை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்கள் அளிக்கின்ற புகார்கள் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். புகார்கள் குறித்து 100 நிமிடங்களுக்குள் தீர்வு காணப்படும். முதல்முறை வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். சி விஜில் செயலி குறித்து மாணவர்கள் தொடர்பில் உள்ள அனைத்து குழுக்களுக்கும் வாட்ஸ்அப், முகநூல், இன்ஸ்டாகிரம் மூலம் தெரியப்படுத்த வேண்டும் என்றார்.

முன்னதாக தேசிய வாக்காளர் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. கல்லூரி முதல்வர் ஜான் கென்னடி வேதநாதன் வரவேற்றார். அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்