தேர்தல் தொடர்பான கருத்துகளை - சமூகவலைதளங்களில் பதிவிட போலீஸாருக்கு தடை :

By செய்திப்பிரிவு

தேர்தல் தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்துகள், ஆடியோ,வீடியோக்களை பதிவிடுவதற்கு போலீஸாருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தென்மண்டல காவல்துறை தலைவர் முருகன் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவீன் குமார்அபிநபு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும்கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.

தென் மண்டல காவல்துறை தலைவர் பேசும்போது, “தேர்தல் நடைபெறும் அனைத்து வாக்குச் சாவடிகளையும் போலீஸார் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வாக்குச் சாவடிகளில் உள்ளகுறைகளை உரிய அலுவலரிடம் கூறி சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோத செயல்கள் எதுவும் நடைபெறாத வகையில் முக்கியமான பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காவலர்கள் கரோனா வழிகாட்டுதல் முறைகளை கடைபிடிக்க வேண்டும். சமூக வலைதளங்களில் தேர்தல் குறித்து ஆடியோ வெளியிடுவது மற்றும் ஸ்டேட்டஸ் வைப்பதை காவலர்கள் தவிர்க்க வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்