திருவண்ணாமலை மாவட் டத்தில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பயிற்சி காணொலி வாயிலாக வழங் கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தேர்தல் தொடர்பான விவரங்கள் பெறுவதற்கு சிறப்பு வீடியோ அழைப்பு உதவி எண் 88707-00800, கடந்த 10-ம் தேதி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 27 ஆயிரம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டுள் ளனர். இவர்களுக்கு தேர்தலில் வாக்களித்திடவும் விழிப்புணர்வு பேரணிகள், காதுகேளாதோர், வாய்பேச முடியாதவர்கள் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் எவ்வாறு வாக்களிக்க வேண் டும் என்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கட்டணம் இல்லாத தகவல் மையத்தை தொடர்பு கொண்டால் சைகை மொழிபெயர்ப்பாளர் வீடியோ காட்சி மூலமாக விளக்கமளிப்பார். இந்த மையம் தினசரி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago