வேலூர் மாவட்டத்தில் - தேர்தல் பொது பார்வையாளர்கள் நியமனம் : ஆட்சியர் சண்முகசுந்தரம் தகவல்

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பொது பார்வையாளர் களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகளும், காவல் பார்வையாளராக ஒரு ஐபிஎஸ் அதிகாரியை இந்திய தேர்தல் ஆணையம் நியமித் துள்ளதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி ஊரக மற்றும் நகர் பகுதிகளில் தனியார் கட்டிடங் களில் அனுமதி பெறாமல் சுவர் விளம்பரம் செய்வது, வாக்காளர்களை கவர பணம் மற்றும் பரிசுப்பொருட்களை வழங்குவது, ஆயுதம் கொண்டு மிரட்டல் விடுப்பது, வேட்பாளர்கள் தேர்தலில் செய்யும் செலவுகள் குறித்தும் புகார் அளிக்க இந்திய தேர்தல் ஆணையம் பொது தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் காவல் பார்வையாளர்களை அனைத்து தொகுதிகளுக்கும் நியமித்து வருகிறது.

அதன்படி, வேலூர் மாவட்டம் வேலூர் மற்றும் அணைக்கட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு பரம்பல் கவுர் என்பவர் நியமிக்கப் பட்டுள்ளார். இவரது தொலைபேசி எண் : 94987-47540, பேக்ஸ் எண்: 0416-2906224, இணையதள முகவரி, parampalsidhu@yahoo.com.

கே.வி.குப்பம் (தனி) தொகுதிக்கு சித்தரஜ்ஜன்குமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தொலைபேசி எண் 94987-47541 பேக்ஸ் எண் 0416-2906223, இணையதள முகவரி ckumar1961@yahoo.com ஆகும்.

குடியாத்தம் (தனி) தொகுதிக்குவிபுள் உஜ்வால் நியமிக்கப்பட்டுள் ளார். இவரது தொலைபேசி எண் 94987-47542, பேக்ஸ் எண்: 0416-2906221, இணையதள முகவரி vipul.ujwal@ias.gov.in ஆகும். காட்பாடி தொகுதிக்கு சித்ரா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தொலைபேசி எண் 94987-47543, பேக்ஸ் எண்: 0416-2906620, இணையதள முகவரி chitrasouparnikacs@gmail.com ஆகும்.

அதேபோல, வேலூர் மாவட் டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் காவல் பார்வை யாளராக மாயங்க்  வஸ்தவா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தொலைபேசி எண் 94987-47545, பேக்ஸ் எண்: 0416-2906220, இணையதள முகவரி ipsmayank@icloud.com ஆகும்.

எனவே, தேர்தல் தொடர்பான புகாராக இருந்தால் அந்தந்த தொகுதியைச் சேர்ந்த வாக் காளர்கள் பொது பார்வை யாளர்கள் மற்றும் காவல் பார்வையாளர்களிடம் தங்களது தேர்தல் புகார் மற்றும் தகவல் களை தெரிவிக்கலாம்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்