பிச்சாவரம் பகுதியில் வனத்துறையினர் - ஆமைக் குஞ்சுகளை கடலில் விட்டனர் :

By செய்திப்பிரிவு

ஆலிவ் ரிட்லி வகை ஆமைகள்அரிய வகை இனமாகும். இதை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் வனத்துறையினர் கடந்த 3 மாதங்களாக அப்பகுதி கடற்கரையில் ஆலிவ் ரிட்லி ரக கடல்ஆமை முட்டைகளை சேகரித்து, அங்குள்ள செயற்கை பொறிப்பகத்தில் பாதுகாப்பாக வைத்து வந்தனர். நடப்பாண்டில் இதுவரை 13 ஆயிரம் ஆமை முட்டைகள் சேகரித்து பொறிப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

கடந்த 15-ம் தேதி செயற்கை பொறிப்பகத்தில் 672 ஆமைக்குஞ்சுகள் முட்டையில் இருந்து வெளியே வந்தது. மாவட்ட வன அலுவர் செல்வம் உத்தரவின் படி பிச்சாவரம் வன சரக அலுவலர் கமலக்கண்ணன் தலைமையில் வனக்காப்பாளர்கள் ராஜேஷ்குமார்,சரண்யா, அபிராபி, அலமேலு, வனக்காவலர் எழிலரசன் மற்றும் படகு ஓட்டுநர் முத்துக்குமரன் உள்ளிட்ட குழுவினர் ஆமைக் குஞ்சுகளை நேற்று பிச்சாவரம் பகுதியில் உள்ள கடலில் விட்டனர்.

ஆமை முட்டைகளை நேர்த்தியான முறையில் சேகரம் செய்து, செயற்கை பொறிப்பகத்தில் வைத்து நல்ல முறையில் பாதுகாத்து வருவதால் 95 சதவீதத்துக்கும மேல் முட்டை களில் இருந்து குஞ்சுகள் வெளி வருவதாக பிச்சாவரம் வன சரக அலுவலர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்