விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் நேற்று அதிகாலை பறக்கும் படை அலுவலர் மாதவன் தலைமையிலான குழுவினர் அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது, ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 9 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் காரில் வந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசார ணையில் தெலங்கானா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், கடியத்தைச் சேர்ந்த சாய்பிரசாத் என்பவர் திண்டுக்கல்லுக்கு சந்தன மரக்கன்றுகள் வாங்க எடுத்துச் சென்றது தெரிய வந்தது.
பறிமுதல் செய்த தொகை ரூ.9 லட்சத்தை தொகுதி தேர்தல் அலுவலர் அறிவுடை நம்பி, உதவி தேர்தல் அலுவலர் தமிழ்செல்வியிடம் ஒப்படைத்தனர்.
மேலும் விக்கிரவாண்டி அருகே பனயபுரத்தில் பறக்கும் படை அலுவலர் ஜெய்சன் தலைமையிலான குழுவினர் நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது போதிய ஆவணங்களின்றி பையில் எடுத்து வரப்பட்ட ரூ 59,950 மதிப்புள்ள கவரிங் ஜெயின், கம்மல், கொலுசு, தலைசெட் உட்பட 428 பொருட்களை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் விழுப்புரம்,கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் கவரிங் நகை வியாபாரி என தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை, உதவி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago