அம்பாசமுத்திரம், கடையநல்லூர் தொகுதியில் அதிமுக, இ.யூ.மு.லீக் வேட்பாளர்கள் மனு - சங்கரன்கோவில், வாசுதேவநல்லூரில் மனு தாக்கல் மந்தம் :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் இசக்கி சுப்பையா, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரதீக் தயாளிடம் மனுவை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் குறிப்பிட்டுள்ள அவரது சொத்து மதிப்பு விவரம்:

கையில் ரொக்கம் ரூ.54,000. அசையும் சொத்து ரூ.3,79,72,472, அசையா சொத்து ரூ.208,96,47,936, கடன் ரூ.4,51,65,497. அவரது மனைவி மீனாட்சி கையில் ரொக்கம் ரூ.49,000. அவரது பெயரில் அசையும் சொத்து ரூ.3,06,42,296, அசையா சொத்து ரூ.30,93,58,000. கடன் ரூ.65,00,000.

இதுபோல பாளையங்கோட்டை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் ஏ.பாத்திமா, திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணனிடம் மனு தாக்கல் செய்தார்.

ராதாபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வி.ராஜிவ் என்பவரும், திருநெல்வேலி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட ஆர். சங்கரநாராயணன் என்பவரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

தென்காசி மாவட்டம் கடைய நல்லூர் தொகுதியில் போட்டி யிடும் அதிமுக வேட்பாளர் கிருஷ்ணமுரளி தேர்தல் நடத்தும் அலுவலர் ஷீலாவிடம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதேபோல், திமுக கூட்டணியில் கடையநல்லூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் முஹம்மது அபூபக்கர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சங்கீதா தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜமனோகரனிடம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

தென்காசி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 10 வேட் பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி) ஆகிய தொகுதிகளுக்கு இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

வேட்பாளர் மீது வழக்கு பதிவு

கடையநல்லூர் தொகுதியில் அமமுக வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ள அய்யாத்துரைப் பாண்டியன் நேற்று முன்தினம் கடையநல்லூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அதிகளவில் கூட்டத்தை கூட்டியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்துக்கு இடையூறு செய்தது உட்பட 3 பிரிவுகளில் அய்யாத்துரைப் பாண்டியன் உட்பட 3,500 பேர் மீது கடையநல்லூர் போலீஸார் வழக்குபதிவு செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்