இதுவரை அடையாள அட்டை பெறாத - வாக்காளர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தகவல்

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை வாக் காளர் அடையாள அட்டையை பெறாத புதிய வாக்காளர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து தங்களுக்கான வாக்காளர் அடையாள அட்டையை பெறலாம் என ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருப்பத்தூர் மாவட்டத்தில், பல மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற புதிய வாக்காளர் சேர்ப்பு முகாமில் வாணியம்பாடி தொகுதியில் 928 பேர், ஆம்பூர் தொகுதியில் 2,865 பேர், ஜோலார்பேட்டை தொகுதியில் 1,869 பேர், திருப்பத்தூர் தொகுதியில் 760 பேர் என மொத்தம் 4 தொகுதிகளிலும் 6,422 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்க வசதியாக 4 தொகுதிகளிலும், கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

இதில், 859 பேர் மட்டும் பங்கேற்று தங்களுக்கான புதிய வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொண்டனர். மீதமுள்ள 5,590 புதிய வாக்காளர்கள் தங்களுக்கான வாக்காளர் அடையாள அட்டையை பெற வசதியாக www.nvsp.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து தங்களுக்கான புதிய அட்டையை பெறலாம்.

இது தொடர்பாக மேலும் விவரம் தேவைப் படுவோர், 1950 என்ற எண்ணில் வாக்காளர் சேவை மையத்தை அணுகி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்