தேர்தலில் வாக்குகளை யாரிடமும் விலை பேசக்கூடாது : பொதுமக்களுக்கு ஆட்சியர் சிவன் அருள் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

வாக்காளர்கள் தங்களது பொன் னான வாக்குகளை யாரிடமும் விலை பேசக்கூடாது என திருப் பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் வேண்டுகொள் விடுத் துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் ஊராட்சிக்கு உட்பட்ட ஆசிரியர் நகர், அசோக் நகர் பகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி குடுகுடுப்பைக்காரர் மற்றும் பூம், பூம் மாட்டுக்கார்கள் வாயிலாக தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.

மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசும்போது, "தமிழ கத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி இன்று (நேற்று) பாச்சல் ஊராட் சிக்கு உட்பட்ட அசோக் நகர், ஆசிரியர் நகர் பகுதியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப் படுகிறது.

கடந்த தேர்தலின் போது பாச்சல் ஊராட்சியில் வெறும் 65 சதவீதம் வாக்குகளே பதிவாகி யுள்ளன. எதிர்பார்த்ததை விட மிக குறைவான வாக்குப்பதிவு அப் போது நடைபெற்றது. இந்த முறை அப்படி நிகழக்கூடாது. இங்கு, 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும். அதற்கு, இப்பகுதி மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தேர்தலில் வாக்காளர்கள் மனசாட்சியுடன் வாக்களிக்க வேண்டும், தங்களது பொன்னான வாக்குகளை விலை பேசக்கூடாது. வாக்குக்கு பணம் பெறுவது சட்டப்படி குற்றச்செயலாகும் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்’’ என்றார்.

இதைத்தொடர்ந்து, குடுகுடுப் பைக்காரர்கள் மற்றும் பூம், பூம் மாட்டுக்காரர்கள் வீதி, வீதியாக சென்று தங்களது பாணியில் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் எனக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதேபோல, மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மகேஷ்பாபு மற்றும் மகளிர் திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி ஆகி யோர் வீடு, வீடாக சென்று துண்டுப் பிரசுரங்கள் வழங்கி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அருண், மகளிர் திட்ட உதவி அலுவலர்கள் பழனி, கலைச்செல்வன், ஜோலார் பேட்டை வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் சங்கரன், பிரேம்குமார், மகளிர் குழுவைச் சேர்ந்த பெண்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்