வேலூரில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல்-டாட் ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
வேலூர் தலைமை தபால் நிலைய வளாகத்தில் அகில இந்திய பிஎஸ்என்எல்-டாட் ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் நேற்று தர்ணா நடைபெற்றது. இதற்கு, மாவட்டத் தலைவர் ஏழுமலை, மாவட்டச் செயலாளர் ஜோதி சுதந்திரநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் பென்ஷன் மாற்றம் செய்ய வேண்டும், 2020-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், மருத்துவப் படி மற்றும் மருத்துவ பில் தொகைக்கான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட வற்றை வலியுறுத்தி போராட் டத்தில் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago