தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி திருவண்ணாமலை அடுத்த அடி அண்ணாமலை ஊராட்சியில் விழிப்புணர்வு நேற்று நடைபெற்றது.
அடி அண்ணாமலை ஊராட்சி கூட்டுறவு ரேஷன் கடையில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை சமையல் காஸ் சிலிண்டர்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களில் மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான சந்தீப் நந்தூரி ஒட்டினார். மேலும், ரேஷன் கடையில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் துணி மற்றும் பாமாயில் பாக்கெட்டுகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. அப்போது ரேஷன் கடைக்கு வந்த கிராம மக்களிடம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் ராஜ்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப் பதிவாளர் காமாட்சி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago