பொதுமக்கள் புகார் எதிரொலி - மாதிரி வாக்குச்சாவடியில் ஆட்சியர் திடீர் ஆய்வு :

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக செய்யப்படவில்லை என்ற பொதுமக்கள் புகாரைத் தொடர்ந்து, காஞ்சி ஆட்சியர் மகேஸ்வரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சி ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் மாதிரி வாக்களிக்கவும், வாக்குப்பதிவு எவ்வாறு செய்வது? வி.வி.பேட் இயந்திரத்தில் தான் அளிக்கும் வாக்கு சரியாக பதிவாகியுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளவும் வகை செய்யப்பட்டுள்ளது.

இங்கு மாதிரி வாக்குப்பதிவு செய்ய வரும் பொதுமக்கள் அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும். கைகளை கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும் மற்றும் கையுறை அணிய வேண்டும் என கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஆனால் இங்கு வரும் பலர் கையுறை அணிவதில்லை, ஒரு சிலர் முக்கவசம் அணியவில்லை என புகார்கள் எழுந்தன. பொதுமக்களின் இத்தகைய புகார்களை தொடர்ந்து, இந்த மாதிரி வாக்குச் சாவடியில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாலமுருகன் உட்பட பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்