கடலூர் மாவட்டத்தில் வாக்குச் சாவடியில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு வரும் 21-ம்தேதி பயிற்சி முகாம் நடைபெறு கிறது. கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 3,001 வாக்குச்சாவடிகளில் 14 ஆயிரத்து 404 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணிபுரிய உள்ளனர். இவர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வரும் 21-ம்தேதி, கடலூர், பண்ருட்டி, வடலூர், நெய்வேலி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவன கிரி, விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன. இதற்கான பணி நியமன ஆணை துறை வாரியாக சார்வு செய்யப்பட்டு வருகிறது. பணி நியமன ஆணை கிடைக்கப்பெறாதவர்கள் தங்களது துறை தலைமை அலுவலக அலுவலரை தொடர்பு கொண்டு நியமன ஆணையினை பெற்றுக் கொள்ளலாம். பணி நியமன ஆணை பெற மறுத்தாலோ அல்லது ஆணையினை பெற்றுக் கொண்டு பயிற்சி வகுப்பினை புறக்கணித்தாலோ, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 26-ன் கீழ் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பணி நியமன ஆணை கிடைக்கப்பெறாதவர்கள் தங்களது துறை தலைமை அலுவலக அலுவலரை தொடர்பு கொண்டு நியமன ஆணையினை பெற்றுக் கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago