தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க ஊக்கப்படுத்த வேண்டும் : மங்கள்யான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டத்தில் நேற்று நடைபெற்ற திருமண விழாவுக்கு வந்த மங்கள்யான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களிடம் கூறியது:

கல்லூரி மாணவர்கள் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப் பெண் பெற்று வெற்றி பெற வேண்டும் என பெற்றோர்கள் விரும்புகிறார்கள். அதேபோன்று தேர்தலிலும் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கு நூறு சதவீதம் வாக்களிக்க ஊக்கப்படுத்த வேண்டும். அதே போல் வாக்காளர்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும். இதை அனைவரும் பின்பற்றினால் நாடு முன்னேற்றம் அடையும். இளைஞர்களின் எதிர்காலம் நாட்டின் எதிர்காலம். அதே போன்று நமது வாக்கும் நமது நாட்டின் எதிர்காலம்.

இந்திய விண்வெளித் துறை உலக அளவில் முதல் ஐந்து இடங்களில் உள்ளது. செயற் கைக்கோள்கள் செலுத்துவதில் முதல் 3️ இடங்களில் உள்ளது. மாணவர்களும் செயற்கைக்கோள் செய்ய முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நம்முடைய தமிழ்நாட்டு அரசு பள்ளி மாணவர்கள் அதில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன்மூலம் அந்த துறையில் நாம் எந்த அளவுக்கு முன்னேறிச் சென்றுள்ளோம் என்பது தெரியும். இந்தத் துறை யில் எதிர்காலத்தில் முதல் இரண்டு இடங்களுக்கு நாம் முன் னேறிச் செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.

மற்ற நாடுகளின் செயற்கை கோள்களை ஏவுவதற்கு இந்தியா வில் தொழில்நுட்பத்துடன் கூடிய வசதிகள் உள்ளன. இதன் மூலம் வர்த்தக ரீதியாக பல நல்ல பயன்கள் உள்ளன என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE