புதுக்கோட்டை மாவட்டம் கார்க்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மனைவி சரஸ்வதி(47). இவரை, அதே பகுதியைச் சேர்ந்த பி.டெக்ஸ் அரவிந்த்(27) என்பவர் கடந்த 2015-ல் நகைக்காக கொலை செய்து, சடலத்தை எரித்துள்ளார்.
இதுகுறித்து நாகுடி போலீ ஸார் வழக்கு பதிவு செய்து, டெக்ஸ் அரவிந்த்தை கைது செய்தனர். புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அதில், கொலைக் குற்றம் சாட்டப்பட்ட டெக்ஸ் அரவிந்த்-க்கு ஆயுள் தண்டனையும், ரூ.80 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சத்யா உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago