ஈரோட்டில் கரோனா தடுப்பு விதிகளை மீறிய 7 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
ஈரோடு ஸ்டோனி பாலம் அருகேயுள்ள மீன் விற்பனை சந்தையில் மாநகராட்சி துப்புரவுஆய்வாளர் இஸ்மாயில் தலைமையில் 10-க்கும் மேற்பட்டமாநகராட்சி பணியாளர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, முகக் கவசம் அணியாமல் மீன் வாங்க வ்ந்தவர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
அவ்வழியே வந்த பேருந்தை நிறுத்தி ஆய்வு செய்த குழுவினர், முகக்கவசம் அணியாமல் வந்த பயணிகளுக்கும் அபராதம் விதித்து, முகக் கவசம் வழங்கினர். முகக் கவசம் அணியாத பயணிகளை ஏற்றிய பேருந்து நடத்துநருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப் பட்டது.
இதேபோல, ஈரோடு சம்பத் நகரில் உள்ள உழவர் சந்தையிலும் மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் நல்லசாமி தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு,முகக்கவசம் அணியாதவர் களுக்கு அபராதம் விதித்தனர்.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “முகக்கவசம் அணியாதவர் களிடம் இருந்து ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறிய 4 கடைகளுக்கு ரூ.5,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 7 கடைகளுக்கு சீல் வைக்கப் பட்டுள்ளது” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago