ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஈரோடு ஆட்சியர் அலுவலத்தில் நடந்தது. கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் தலைமை வகித்து பேசியதாவது:
தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், தங்கள் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக் கவசம் அணியவேண்டும் என அறிவுறுத்த வேண்டும். சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளுக்கு வரும் ஒவ்வொரு நபருக்கும் உடல் வெப்பநிலை அறியும் தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதித்த பின்னர் அனுமதிக்க வேண்டும். அரசின் விதிமுறைகளைப் பின்பற்றாவிடில், அபராதம் மற்றும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும், என்றார்.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாலாஜி (பொது), தனித்துணை ஆட்சியர் குமரன், மாநகர நல அலுவலர் முரளிசங்கர் மற்றும் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல் உரிமையாளர்கள், லாரி, கார், ஆட்டோ, மினிபஸ் மற்றும் இருசக்கர வாகன உரிமையாளர்கள், சர்வீஸ் ஸ்டேஷன், பேக்கரி உரிமையாளர்கள், பில்டர்ஸ் அசோசி யேஷன்ஸ், காய்கறி வியாபாரிகள் சங்கம், முடிதிருத்துவோர் சங்கம், குறு, சிறு தொழில் உரிமை யாளர்கள் உள்ளிட்ட நிறுவன உரிமையாளர்கள் மற்றும் சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago