சிதம்பரத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி எஸ்பி நேற்று மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார்.
கடலூர் மாவட்ட நிர்வாகமும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மாரத்தான் போட்டி சிதம்பரம் தெற்கு வீதியில் இருந்து தொடங்கியது. கடலூர் எஸ்பி அபிநவ் போட்டியை தொடங்கி வைத்தார். சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன், அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் ஞானதேவன், சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் உள்ளிட்ட 500-க்கும்மேற்பட்டோர் பங்கேற்றனர். மாரத்தான் ஓட்டம் மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி வழியாக 6 கிலோமீட்டர் தூரத்தை கடந்து அண்ணாமலை பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தை அடைந்தது. அங்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி அண்ணாமலை பல்கலைக்கழக இசைக் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. மாரத்தான் ஓட்டத்தில் முதலிடம் பிடித்த ஊட்டியை சேர்ந்த நிக்கிகுமாருக்கு ரூ10 ஆயிரம் பரிசும், கேடயமும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago