மானாமதுரை தொகுதியில் போட்டியிட சீட் கிடைக்காத உள்ளூர் திமுக நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் முன்னாள் அமைச்சர் தமிழரசிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் மதுரை சமயநல்லூர் (தனி) தொகுதியில் வெற்றிபெற்று ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் தமிழரசி. தொகுதி சீரமைப்பில் சமயநல்லூர் தொகுதி இல்லாமல் போனதால் 2011-ம் ஆண்டு தேர்தலில் மானாமதுரை (தனி) தொகுதியில் தமிழரசி போட்டியிட்டுத் தோற்றார். அப்போதே வெளியூர் நபர் தங்கள் பகுதியில் போட்டியிட விரும்பாத உள்ளூர் நிர்வாகிகள், அவருக்குச் சரியாக வேலை செய்யவில்லை எனப் புகார் எழுந்தது.
2016 தேர்தலில் தமிழரசி மீண்டும் சீட் கேட்டார். ஆனால் அவருக்கு மறுக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ் மகள் சித்திரைச்செல்விக்கு கொடுக்கப்பட்டது. ஆனால், அவர் தோல்வியடைந்தார். 2019-ம் ஆண்டு நடந்த மானா மதுரை இடைத்தேர்தலிலும் சீட் கேட்டார். ஆனால், அவருக்கு மறுக்கப்பட்டு இலக்கியதாசனுக்கு சீட் கொடுக்கப்பட்டது. அவரும் தோல்வியடைந்தார்.
மீண்டும் வாய்ப்பு
இந்நிலையில், 2021 தேர்தலில் மானாமதுரை தொகுதியில் போட்டியிட திமுகவில் 32 பேர் விருப்ப மனுக் கொடுத்திருந்தனர். ஆனால் மீண்டும் தமிழரசிக்கே சீட் கொடுக்கப்பட்டுள்ளது.சீட் கிடைக்காத உள்ளூர் நிர்வாகி கள் சிலர், மதுரையைச் சேர்ந்த தமிழரசிக்கு சீட் கொடுத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் கட்சி தலைமைக்கும் புகார் அனுப்பியுள்ளனர். இத னால் தமிழரசிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உள்ளூர் நிர்வாகிகளைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago